கோபிக்கு எதிராக திரும்பிய மகன்கள், அதிரடி காட்டிய பாக்கியா, மூக்குடைந்த கோபி- பாக்கியலட்சுமி பரபரப்பு புரொமோ
பாக்கியலட்சுமி
ஒரு காலத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருந்த தொடர் பாக்கியலட்சுமி.
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வந்தது, ஆனால் இடையில் கதையில் கொஞ்சம் சொதப்பல்கள் நடக்க டிஆர்பியில் இறங்கியது.
ரசிகர்கள் கதையில் வரும் சில காட்சிகளை எல்லாம் வைத்து நிறைய மீம்ஸ்கள் உருவாக்கிவிட்டனர்.

புதிய புரொமோ
கடந்த வாரம் எல்லாம் கோபி-ராதிகா கர்ப்பத்தின் கதைக்களம் ஒளிபரப்பாகி வந்தது.
வார இறுதியில் ஒருவழியாக இப்படியே விட்டால் இழுத்துக்கொண்டே போவார்கள் என பாக்கியாவே எல்லோரின் முன்பும் விஷயத்தை கூறிவிட்டார்.
இந்த நிலையில் வரும் வாரத்திற்கான புரொமோவில் எழில், செழியன், கோபியை வீட்டைவிட்டு வெளியே போக சொல்ல அவரோ இது நாம் சம்பாதித்து கட்டிய வீடு வெளியே போக சொல்ல உனக்கு உரிமை இல்லை என கூறுகிறார்.
சரிகமப 4 நிகழ்ச்சியில் தனது ஆசையை கூறிய இலங்கை பாடகர், கார்த்தி கொடுத்த சர்ப்ரைஸ்- நெகிழ்ச்சியான சம்பவங்கள்
உடனே பாக்கியா இது என் வீடு வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள் என கூற கோபி நீ யார் சொல்வதற்கு என் அம்மா சொல்லட்டும் என்கிறார்.
ஈஸ்வரி உன் மகன்கள் ஏதாவது செய்வதற்குள் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடு என கோபி மூக்கை உடைக்கிறார். இதோ புரொமோ,