கோபியுடன் வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஈஸ்வரி, குடும்பத்தினர் செய்த விஷயம்- பாக்கியலட்சுமி சீரியல் அதிரடி புரொமோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் ஒருகாலத்தில் டாப்பில் இருந்த தொடர்.
இப்போது இந்த தொடர் 2ம் இடத்தில் இருந்து வருகிறது, கதைக்களமும் வாரா வாரம் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கிறது.
கதையில் சில வாரங்களாக கோபி-ராதிகா கர்ப்பமான செய்தியை குடும்பத்தினருடன் கூற இழுத்து வந்தார்கள்.
ஒருவழியாக விஷயம் தெரிந்துவிட்டது, கோபி வீட்டைவிட்டு வெளியே செல்லவும் பாக்கியா அன் கோ கூறிவிட்டார்கள்.
புரொமோ
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் எப்படியோ பேசி நடித்து தனது அம்மாவை தன்னுடன் வர சம்மதம் வாங்கிவிட்டார்.
ஈஸ்வரியும் கோபியுடன் செல்ல முடிவு செய்து அவருடன் செல்ல பாக்கியா எதுவும் சொல்லாமல் அனுப்பி வைக்கிறார். ஈஸ்வரியை அவரது கணவரும் தடுத்து நிறுத்தவில்லை, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.