இட்லி கடையில் பிரச்சனை.. கைதால் கலக்கத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்! லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா தனது இரண்டு ஹோட்டல்களையும் இனியா மாமனாருக்கு கொடுத்துவிட்டு தற்போது சின்ன ஒரு இட்லி கடை திறந்து இருக்கிறார்.
அந்த கடையில் தான் தற்போது புது பிரச்சனை தொடங்கி இருக்கிறது. கடைக்கு செழியன் வந்திருக்கும்போது அங்கு மூன்று பேர் சாப்பிட வருகிறார்கள்.
செழியன் கைது
ஏரியா கவுன்சிலர் ஆக இருக்கும் அந்த நபர் உடன் வந்தவர்களிடம் பேசும்போது, இந்த கடைக்கு வரும் காரணமே, இங்கே அழகான ஆண்ட்டி இருப்பது தான் என சொல்கிறார். அதை கேட்டு கடும் கோபமாகும் செழியன் அந்த நபரை அடித்து உதைக்கிறார்.
அதன் பின் பாக்யா வீட்டுக்கு வரும் போலீஸ் செழியனை கைது செய்து கொண்டு செல்கிறது. இதை பார்த்து பாக்யா குடும்பம் அதிர்ச்சியில் இருக்கிறது. ப்ரோமோவில் நீங்களே பாருங்க.

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
