ராதிகாவை நம்பி ஏமாந்த கோபி! பாக்யாவின் அருமை இப்போ தான் தெரியுது
பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு பற்றிய முழு விவரம்
காதலை நிராகரித்த எழில்
பாக்யாவின் மகன் எழில் எடுத்து வரும் படத்தின் தயாரிப்பாளர் மகள் வர்ஷினி வந்து நேரடியாக அவரிடம் காதலை சொல்கிறார். ஆனால் நான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன் என எழில் ப்ரோபோசலை நிராகரித்துவிடுகிறார்.
பாக்யா வீட்டில் பிரியாணி
பாக்யா இன்று வீட்டில் எல்லோருக்கும் பிரியாணி செய்திருக்கிறார். கேட்டரிங் மூலம் நல்ல வருமானம் வந்திருக்கிறது, இனி அந்த மண்டபத்தில் நடக்கும் எல்லா functionக்கும் நான் தான் சமைக்க போகிறேன் என பாக்யா மகிழ்ச்சியாக சொல்கிறார்.
பிரியாணி அருமையாக இருக்கிறது என சொல்லி குடும்பத்தில் எல்லோரும் பாராட்டுகிறார்கள்.
ராதிகாவை நம்பி ஏமாந்த கோபி
கோபி ஆபிசில் இருந்து திரும்பி வந்தால் ராதிகா அவரை கண்டுகொள்வதே இல்லை. காபி கிடைக்குமா என அவர் கேட்டால் ஆர்டர் பண்ணிக்கோங்க என கூலாக சொல்லிவிட்டு போகிறார் ராதிகா. அதன் பின் பசிக்கிறது என சொன்னாலும் அதே பதில் தான்.
அதன் பின் ராதிகா ஒருவழியாக கிச்சன் சென்று சமைக்க செல்கிறார். பக்கத்துக்கு வீட்டில் பாக்யா செய்த பிரியாணி வாசம் கோபியை இழுக்கிறது. ராதிகா தான் பிரியாணி செய்கிறார் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் டேபிளில் சாப்பிட அமர்ந்தால் கோபிக்கு பழைய கஞ்சி போல எதையோ ராதிகா கொண்டு வந்து கொடுக்கிறார். நம்பி ஏமாந்துட்டியே கோபி என கோபி மனதிற்குள் புலம்புகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.
திருமணத்திற்கு முன்பே பாவனி - அமீர் ஜோடியாக வெளிநாடு ட்ரிப்! எந்த நாட்டுக்கு தெரியுமா