பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. புரொமோவுடன் இதோ
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் கொரோனா காலகட்டத்தில் புதுமுக நடிகையை முக்கிய கதாபாத்திரமாக நடிக்க வைத்து தொடங்கப்பட்ட தொடர் பாக்கியலட்சுமி.
வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்கும் ஆண்களை விட அதிகம் உழைக்கிறார்கள், ஆனால் அது சாதாரண வேலையாக வீட்டில் இருப்பவர்களாலேயே பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு குடும்ப தலைவியின் கதையாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி இப்போது நேரம் மாற்றப்பட்டு மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் கோபி-ஈஸ்வரி தனியாக ஒரு வீட்டில் வசித்து வர பாக்கியா அவரது வீட்டில் தனது மகன்கள், மகளுடன் இருக்கிறார்.
புரொமோ
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ வெளியாகிறது. அதில் பாக்கியா ரெஸ்டாரன்டை விலைக்கு வாங்க சுதாகர் என்ற புதிய வில்லன் களமிறங்குகிறார்.
அவர் பாக்கியா வீட்டிற்கே வந்து ரெஸ்டாரன்ட் பற்றி பேச பாக்கியலட்சுமி அசால்டாக பேசி வெளியே அனுப்புகிறார், பின் அவரை சம்மதிக்க வைக்க கோபியை நாடுகிறார்.
இதோ புரொமோ,