இனியா திருமணத்திற்காக நாடகம் போடும் கோபி.. பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியாவின் திருமணம் பற்றிய காட்சிகள் தான் சென்றுகொண்டிருக்கிறது. வீட்டின் வேலைக்காரி பையனை இனியா காதலித்ததால் வந்த பிரச்சனை பரபரப்பாக சென்ற நிலையில், அடுத்து புது வில்லன் சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
பாக்யாவின் ஹோட்டலை விலைக்கு கேட்ட வில்லனை அவர் அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். அவரை பழிவாங்க கோபி மூலமாக இனியாவை தனது மருமகள் ஆக்க விரும்புவதாக பேசுகிறார் வில்லன் சுதாகர்.
கோபி மற்றும் பாட்டி இருவரும் அந்த திருமணத்தை நடத்த அதிகம் தீவிரமாக இருக்கின்றனர்.
லேட்டஸ்ட் ப்ரோமோ
இந்நிலையில் தற்போது சீரியலின் லேட்டஸ்ட் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியாவை பெண் பார்க்க வருகிறார்கள். அதன் பின் திருமணத்தை உடனே நடந்த வேண்டும் என சொல்கிறார்கள். ஏன் இவ்வளவு அவசரம் என பாக்யாவும் கேள்வி கேட்கிறார்.
அதன் பின் கோபிக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக கால் வருகிறது. இனியாவை பார்க்க வேண்டும் என அவர் சொல்கிறார். எதிர்பார்த்தது போலவே இனியாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க கோபி போடும் நாடகம் தான் இது.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க.