பாக்யா - பழனி லவ் ட்ராக் தொடங்கியாச்சு.. பாக்கியலட்சுமி சீரியல் முடியப்போகிறதா? புது ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா தனியாக ரெஸ்டாரண்ட் தொடங்கி இருக்கிறார். அதற்கு அனைத்து உதவிகளையும் அவரது நண்பராக இருக்கும் பழனிச்சாமி தான் செய்து வருகிறார்.
பாக்யா மற்றும் பழனி இருவரும் வெறும் நட்புடன் பழகி வருகிறார்களா அல்லது அது காதலாக மாறுமா என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. அதற்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.
லவ் ட்ராக்
பழனிச்சாமி ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, அவருக்கு எந்த மாதிரி பெண் வேண்டும் என அனைவரும் கேட்க, அவர் ஒவ்வொரு கண்டிஷனாக கூறுகிறார்.
அதை எல்லாம் ஒவ்வொன்றாக பாக்யா தூரத்தில் செய்வது அவர் கண்களில் படுகிறது. அதனால் பழனிச்சாமிக்கு லவ் வந்துவிடுகிறது.
லவ் ட்ராக் தொடங்கி அவர்கள் திருமணம் செய்துகொண்டால் சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
ப்ரோமோ இதோ..