பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு திருமணம் முடிந்தது.. கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த கல்யாணம், வீடியோ இதோ
பாக்கியலட்சுமி
சின்னத்திரையில் மாபெரும் சாதனை படைத்த சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. 2020-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 1469 எபிசோட்கள் ஓடி, கடந்த 2025-ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

இந்த சீரியலில் சுசித்ரா, சதிஷ், ரேஷ்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து நடித்திருந்தவர் நடிகை கம்பம் மீனா. இவர் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பம் மீனாவின் மகன் திருமணம்
இந்த நிலையில், நடிகை கம்பம் மீனாவின் மகனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மகனின் திருமண வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில், "இன்று 28/05/2026, என் அம்மையப்பன் ஈசன் அருளாலும் என் குலாம்காத செட்டிகுமாரன் முருகன் அருளாலும் என் மகன் விஜய சரவணன் - அனிஷா திருமணம் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தேறியது. என் பிள்ளைகளை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri