இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது?
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக TRP அதிகம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் ராதிகா கொடுக்கும் இடையூறுகளை சமாளித்து வெற்றிப்பெற்று வருகிறார் பாக்கியா.
இதற்கு இடையில் இனியா கோபி திட்டியதால் மாத்திரை சாப்பிட்டு இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் இனியா கோபியுடன் செல்வாரா அல்லது தனது அம்மாவுடன் செல்வாரா என்பது இந்த வார சஸ்பென்ஸாக இருக்கும் என தெரிகிறது.
திவ்யா கணேஷ்
இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ். சமீபத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசிய திவ்யா ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர இரவு விமானத்தில் பயணிக்கும் போது இடையில் ஏதோ ஓடுவதுபோன்று ஒரு உணர்வு இருந்தது, முதலில் பார்த்த போது எதுவும் இல்லை. மீண்டும் உணர்வு ஏற்பட அப்போது ஒரு நபர் இந்த கேவலமான செயலை செய்தது தெரியவந்தது.
செம்ம டென்ஷன் உடனே எழுந்து அந்த நபருக்கு கன்னத்திலேயே 4 அறை பளார் பளார் என விட்டேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது சகித்துக்கொண்டு செல்லாமல் உடனடியாக தக்க பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?