பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகர்! ரசிகர்கள் ஷாக்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மனைவி மற்றும் குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவை காதலித்து, அவரை திருமணம் செய்யவும் முடிவெடுத்து இருக்கும் கோபி எப்போது சிக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது பாக்கியலட்சுமியில் செழியன் ரோலில் நடித்து வந்த ஆர்யன் திடீரென வெளியேறி இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் வெளியேரி இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. ஆர்யன் சமீபத்தில் தான் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானாவை காதல் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் குடும்பத்தில் திருமணத்தால் பல சிக்கல் எனவும், அதனால் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று கூட செய்தி வந்தது. ஆனால் அவர்கள் அதை மறுத்து ஜோடியாக இருக்கும் போட்டோ வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.