ராதிகாவை பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்ட பாக்யா! கண்ணீர் விட்டு கதறும் கோபி
கையில் களவுமாக மாட்டிக்கொண்ட கோபி தற்போது வீட்டில் எல்லோர் முன்னிலையிலும் தலைகுனிந்து நிற்கிறார். அவரது முகத்திரையை கிழித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் பாக்யா. அவர் மீண்டும் வீட்டுக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடில் கோபி அவரது அறையில் இருக்கும்போது மகன் செழியன் சென்று பேசுகின்றான். அப்போது கோபி கண்ணீர் விட்டு அழுது மகனிடம் மன்னிப்பு கேட்கிறார்.
தான் செய்தது தவறு தான் என்றாலும் அதற்கு காரணம் இருப்பதாக கூறி தன் தரப்பு நியாயத்தை கோபி கூறுகிறார். செழியனும் வழக்கம்போல அவருக்கு தலையாட்டுகிறார். அதன் பின் ஜெனி வந்து பாக்யா பற்றி எமோஷ்னலாக பேசிவிட்டு போகிறார்.
இன்றைய எபிசோடு இதோடு முடிகிறது. ஆனால் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ தான் உச்சகட்ட பரபரப்பாக இருக்கிறது.
பாக்யா நேராக ராதிகா வீட்டுக்கு சென்று "ராதிகா நீங்களும் என்னை கடைசியில் ஏமாத்திடீங்க இல்ல" என கேட்கிறார். மேலும் என்ன நடக்கும் என்பது அடுத்த வாரம் தான் தெரியும்.