பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் இரண்டு சூப்பர்ஹிட் சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி.

கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிவு வந்த நிலையில், பாக்கியலட்சுமி 2 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
புதிய சீரியல்
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி என இரண்டு சூப்பர்ஹிட் சீரியல்களை இயக்கிய இயக்குநர் டேவிட் ஜானின் அடுத்த புதிய சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் புதிய சீரியலுக்கு 'லட்சுமி மெஸ்' என தலைப்பு வைத்துள்ளனர்.

விஜய் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, வைஷ்ணவி, வசந்த் வசி, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். விரைவில் இந்த சீரியலின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.