மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த பரபரப்பு
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்காக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கிய வீட்டிலிருந்து கோபி வெளியேறியதனால் தனது மகனுடன் சேர்ந்து ஈஸ்வரியும் பாக்கியாவின் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார்.
மருத்துவமனையில் ஈஸ்வரி
அங்கிருந்து ராதிகாவின் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி முதலில் கெத்து காட்டினாலும், பின் கஷ்டப்பட துவங்கினார். இந்த நிலையில், தற்போது உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது அத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்து மருத்துவமனைக்கு வந்த பாக்கியா, அவரை தன்னுடைய அழைத்து செல்கிறேன் என கோபியிடம் கூறுகிறார். ஆனால், கோபி என் அம்மாவை நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிடுகிறார்.
பொறுத்திருந்து பார்ப்போம் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று.