நான் ஒரு டம்மி பீஸ்! ஓவர் அட்வைஸ் ஏன்.. விமர்சித்தவர்களுக்கு பதில் கொடுத்த பாக்கியலட்சுமி நடிகர்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற ரோலில் நடித்து வருபவர் சதீஷ்.
ஆரம்பத்தில் மனைவிக்கு துரோகம் செய்து ராதிகா என்ற வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருக்கும் வில்லத்தனமான கதாபாத்திரமாக இருந்தார் கோபி.
ஆனால் ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிறகு கோபி ரோலை காமெடியன் போல மாற்றிவிட்டார் சீரியல் இயக்குனர்.

டம்மி பீஸ்
நடிகர் சதீஷ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். தினமும் காலையில் மக்களுக்கு அட்வைஸ் சொல்லும் வகையில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
அவர் ஓவராக அட்வைஸ் செய்வதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். கமெண்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு வீடியோவை சதீஷ் வெளியிட்டு இருக்கிறார்.
"நான் ஒரு டம்மி பீஸ்... எதோ சந்தர்ப்ப சூழ்நிலையால், ஆண்டவன் அருளால் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பெயரும் புகழும் வந்திருக்கு. நான் யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை, என் அனுபவத்தை தான் ஷேர் செய்கிறேன்" என சதீஷ் கூறி இருக்கிறார். வீடியோ இதோ.