வயசானா லவ் பண்ண கூடாதா.. அப்படி எல்லாம் சட்டம் இருக்கு: பாக்கியலட்சுமி 'கோபி' நடிகர் சதீஷ் கேள்வி
பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் தற்போது வந்துவிட்டது. கோபியின் கள்ளக்காதல் குடும்பத்தினர் எல்லோருக்கும் தெரிய வந்துவிட்டது. ஹாஸ்பிடலில் தான் கோபியை ராதிகா உடன் பார்த்த உண்மையை எல்லோர் முன்னிலையிலும் கூறி பாக்யா கேள்வி கேட்கிறார்.
ஆனால் அதற்க்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் கோபி நின்றுகொண்டிருக்கிறார். கோபி எந்த தவறும் செய்திருக்க மாட்டான் என அவரது அம்மா தான் ஆதரவாக பேசிக்கொண்டிருக்கிறார்.
ராதிகா உடன் தான் அவர் தொடர்பில் இருக்கிறார் என பாக்யா உண்மையை போட்டு உடைக்க அவரும் கடும் ஷாக் ஆகிறார். இன்றைய எபிசோடில் இது தான் நடந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஷ் இது பற்றி பேசும்போது "இன்னும் ஒரு வாரத்திற்கு கூண்டில் குற்றவாளியாக கோபி நிற்கப்போகிறார். தண்டனைக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். பாவம் கோபி.. காதலுக்காக அவர் செய்த பித்தலாட்டங்கள் நிறைய.. அனுபவிச்சி தான் ஆகணும்."
"வயசானால் லவ் பண்ண கூடாது இல்லீங்களா.. அப்படி எல்லாம் சட்டம் இருக்கு.. என்ன பண்றது" என நடிகர் சதீஷ் பேசி இருக்கிறார். வீடியோ இதோ
#Gopi #Baakiyalakshmi pic.twitter.com/3DifonWuHy
— Parthiban A (@ParthibanAPN) July 9, 2022