கோபி சிக்குவாரா? பாக்கியலட்சுமி சீரியலில் இன்று வரும் பெரிய ட்விஸ்ட்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கையும் களவுமாக சிக்குவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது பாக்யாவை அவருக்கே தெரியாமல் விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றுவிட்டார் கோபி.
ராதிகா வீட்டில் பாக்யா
பாக்யாவை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு அதன் பின் ராதிகாவை திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டம் போட்டிருக்கிறார் கோபி. ஆனால் அதே நேரத்தில் அவர் தன் குடும்பத்திடம் சிக்கி அசிங்கப்படக்கூடாது என்றும் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகா வீட்டில் இருக்கும்போது பாக்யா மற்றும் வேலைக்காரி செல்வி ஆகியோர் வருகின்றனர். கோபி தான் கதவை திறக்க செல்கிறார்.
ஜஸ்ட் மிஸ்
ஆனால் அந்த நேரத்தில் கோபிக்கு ஒரு போன் கால் வர அவர் அதை பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரது ராதிகா வந்து கதவை திறக்கிறார். அவர் பாக்யா உடன் பேசுவதை கதவுக்கு அருகில் இருந்து கேட்டு ஷாக் ஆகிறார் கோபி.
பாக்யா உள்ளே வந்து அமர்வதற்குள் கோபி அறைக்கு சென்று கதவை மூடிக்கொள்கிறார். ஆனால் செல்வி வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என கண்டுபிடித்துவிடுகிறார். அதன் பின் கோபியை வெளியில் வந்து பாக்யாவுக்கு ஹாய் சொல்லும்படி கேட்கிறார் ராதிகா. ஆனால் அவர் முடியாது, முக்கியமான கால் இருக்கிறது என சொல்லி சமாளித்துவிடுகிறார்.
சந்தேகம்
அங்கிருந்து வெளியில் வந்த பிறகு பாக்யா, செல்வி இருவரும் அங்கு கோபி கார் இருப்பதை பார்த்து ஷாக் ஆகின்றனர். அப்போது பாக்யா கோபிக்கு போன் செய்ய அவர் எடுப்பதில்லை.
கோபி சார் தான் ராதிகா வீட்டில் இருக்கும் ஆள் என சந்தேகமாக இருப்பதாக பாக்யாவிடம் கூறுகிறார் செல்வி. மேலும் மீண்டும் வீட்டுக்கு சென்று பார்க்கலாம் என கூறுகிறார்.
ஆனால் பாக்யா கோபமாகி தனது கணவரை தவறாக பேசிய செல்வியை திட்டி தீர்க்கிறார். இனி நீ வேலைக்கு வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்து வண்டியில் கிளம்பி செல்கிறார். செல்வியை வண்டியில் ஏற்றாமல் அங்கேயே விட்டுவிட்டு போகிறார் அவர்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
3 கண்டிஷன் இருக்கு.. அடுத்த திருமணம் பற்றி பேசிய இசையமைப்பாளர் இமான்