கோபி அங்கிளுக்கு தைரியத்தை பாத்தீங்களா! பாக்யா, ராதிகா இருவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட போட்டோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அதன் கதை தான். மனைவி, மகன், மகள், வயதான பெற்றோர் என அழகான குடும்பம் இருந்தும் கோபி அங்கிள் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வருகிறார். விரைவில் மொத்த குடும்பத்தையும் விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார் அவர்.
ராதிகா உடன் அவர் ஊர் சுற்றுவதை பார்த்துவிட்ட அப்பாவுக்கு மொத்த உண்மையும் தெரிந்துவிடுகிறது. ஆனால் அவர் பக்கவாதம் வந்து தற்போது படுத்துவிட்டார். அதனால் அவரால் கோபி பற்றிய உண்மையை வெளியில் சொல்ல முடிவதில்லை.
எந்த பிரச்சனை வந்தாலும் கோபி தனது குடும்பத்திடம் சிக்கிக்கொள்ளாமல் எப்படியாவது தப்பித்துவிடுகிறார் கோபி. அவர் எப்போது தான் சிக்குவார் என சீரியல் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கோபி பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா இருவருடனும் நின்று போட்டோ எடுத்து இருக்கிறார். அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோபி அங்கிளுக்கு தைரியத்தை பாத்தீங்களா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.