மாட்டிக்கொண்ட பிறகும் பிளான் போடும் கோபி! தலையை குனிந்தபடி இருப்பது இதற்கு தானா
விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடர் இப்போது உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. ரகசியமாக வைத்திருந்த கோபியின் இன்னொரு காதல் தற்போது மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்துவிட்டது.
பாக்யா மற்றும் மொத்த குடும்பமும் கோபியை நிற்கவைத்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்க அவர் தலைகுனிந்து தான் நின்றுகொண்டிருக்கிறார். கடந்த நான்கு எபிசோடுகளாக இப்படி தான் சென்றுகொண்டிருக்கிறது.
இது பற்றி கோபியாக நடித்து வரும் சதீஷ் பேசி இருக்கிறார். "தலைகுனிந்து நான் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை என கேட்கிறீர்கள். 90 பக்க சீன். பாக்யா என்னை வெச்சி செய்றா. குற்றவாளி கூண்டில் நான் நிற்கிறேன், கைதி என்ன சொல்ல முடியும். தலையை தொங்க போட்டு, குறைந்த தண்டனை உடன் எஸ்கேப் ஆக தான் முயற்சிப்பான். அது தான் என் நிலைமை."
"அடுத்து என்ன வருகிறதோ அதற்க்கு தகுந்தமாதிரி expression காட்டுகிறேன்" என சதீஷ் தெரிவித்து இருக்கிறார்.
#Baakiyalakshmi #Gopi 12.07.2022 pic.twitter.com/EkiDXTCIxR
— Parthiban A (@ParthibanAPN) July 12, 2022