கல்யாணத்தில் தான் பிரச்சனை என்றால், இதிலுமா.. புலம்பும் கோபி
பாக்கியலட்சுமி
கோபிக்கும் ராதிகாவுக்கு இரண்டாம் திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த கல்யாணத்திற்கு கோபியின் முதல் மனைவி பாக்யா தான் சமையல் காண்ட்ராக்ட் எடுத்து செய்தார் என்பது ஹலைட்.
திருமணத்திற்கு கோபியின் அம்மா மற்றும் அப்பா வந்து பெரிய ரகளை செய்து விட்டு செல்கின்றனர். திருமணம் முடிந்து கோபி ராதிகாவின் வீட்டுக்கு வந்து இருக்கிறார். அப்போது ராதிகாவின் சகோதரர் மற்றும் அம்மா இருவரும் நடந்த விஷயங்கள் பற்றி பேசுகின்றனர்.
"என் அம்மா வந்து அப்படி பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறி கோபி அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்.
பர்ஸ்ட் நைட்டிலும் பிரச்சனையா
அதன்பின் கோபி மற்றும் ராதிகாவுக்கு முதலிரவு என அம்மா குழந்தை மயூவை தன்னுடன் வந்து தூங்க சொல்கிறார். அதன்பின் ஒருவழியாக ராதிகா கோபியின் அறைக்கு செல்கிறார். அந்த நேரத்தில் இனியா கோபிக்கு போன் செய்து அழுகிறார். அவரை சமாளிக்க முடியாமல் கோபி திணறி பேசி முடிக்கிறார்.
அந்த நேரம் பார்த்து மயூ 'நான் அம்மாவுடன் தான் தூங்குவேன்' என வந்து நிற்கிறார். இதனால் கோபியின் பர்ஸ்ட் நைட் கனவு முடிந்துபோகிறது.
திருமணத்தில் தான் பிரச்சனை செய்து அதன் பின் இதிலுமா இப்படி என கோபி புலம்புகிறார்.
நடிகை சினேகாவா இது? இளம் வயதில் சுடிதார் அணிந்து எப்படி இருக்கிறார் பாருங்க