பிடிக்காத பாக்யாவுடன் எப்படி 3 குழந்தை பெத்தீங்க.. பாக்கியலட்சுமி சீரியல் ’கோபி’ சதீஷ் சொன்ன பதிலை பாருங்க
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என குடும்பத்தினர் எல்லோருக்கும் தெரியவந்துவிட்டது.
அந்த நேரத்தில் கோபி விபத்தில் சிக்க பாக்யா ஹாஸ்பிடலுக்குசெல்கிறார் . அப்போது கோபியின் மனைவி என அழைக்கும்போது ராதிகா உள்ளே செல்வதை பார்த்து ஷாக் ஆகிறார். கோபி - ராதிகா இருவரும் பேசுவதை கேட்டு மேலும் அதிர்ச்சி ஆகிறார். இனி என்ன நடக்கும் என பார்க்க ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரு கேள்வி பற்றி கோபியாக நடிக்கும் சதீஷ் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பிடிக்காத பாக்யாவுடன் எப்படி மூன்று குழந்தை பெற்றீர்கள் என ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்ன அவர் "திருமணம் ஆகும் போது கோபிக்கு 24 வயது, பாக்யாவுக்கு என்ன வயது.. ரைட்டர் சொல்லவில்லை.. நான் எதாவது வயது சொல்லி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. கோபிக்கு அந்த வயதில் உடல் தேவைகள் இருந்திருக்கும், அதனால் மூன்று குழந்தைகள் பாக்யாவுடன் பெற்று இருக்கலாம் என நினைக்கிறேன்" என நடிகர் சதிஷ் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இது சீரியல், நான் நடிகர், கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன், அதனால் என்னை திட்டாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
#Baakiyalakhsmi #Gopi pic.twitter.com/jxztR9mpEs
— Parthiban A (@ParthibanAPN) July 3, 2022