பாக்யாவிடம் வேலைக்காரன் போல கைகட்டி நிற்கும் கோபி.. ஏன் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மீண்டும் ராதிகா உடன் பாக்யாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். பணம் வாங்கி கொண்டு வீட்டை பாக்யா பெயரில் மாற்றி கொடுத்துவிட்ட நிலையில் அவர் மீண்டும் இங்கேயே வந்து இருப்பது போல கதை மாற்றப்பட்டு இருக்கிறது.
தற்போது செழியன்-ஜெனி, எழில்-அமிர்தா திருமண வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் வந்திருக்கிறது. இதனால் கதை தற்போது பரபரப்பாக நகர தொடங்கி இருக்கிறது.
கைகட்டி நிற்கும் கோபி
இந்நிலையில் தற்போது பாக்யா சேரில் அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் கோபி வேலைக்காரன் போல துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கைகட்டி நிற்கும் போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது.
கோபியாக நடித்து வரும் சதீஷ் தான் அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அடுத்து சீரியலில் இப்படி காட்சிகள் வருகிறதா என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர். இருப்பினும் புகைப்படங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக எடுத்த புகைப்படங்கள் போல தான் இருக்கிறது.