பாக்கியலட்சுமி சீரியலை விட்டு போக முடிவெடுத்த கோபி 'சதீஷ்', ஆனால்..
விஜய் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியல் ஆக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி. கோபியை விவாகரத்து செய்ய பாக்யா ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து கொடுத்துவிடுகிறது.
பாக்கியலட்சுமி
அதற்கு பிறகு வீட்டுக்கு வரும் பாக்யாவை கோபி தகாத வகையில் பேசுவது நேற்றய எபிசோடில் காட்டப்பட்டு இருந்தது.
இந்த தொடரை பார்க்கும் ரசிகர்கள் மொத்த பேரும் கோபியை தான் திட்டி வருகிறார்கள். அந்த ரோலில் நடித்து வரும் நடிகர் சதிஷ் தற்போது தன்னை திட்டுபவர்கள் பற்றி பேசி இருக்கிறார். இது வெறும் நடிப்பு தான் என சொல்லி அவர் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
சீரியலை விட்டு போக நினைத்த கோபி
கோபி வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருப்பதாவது
பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள், அடுத்த 5 நாள் ரொம்ப மோசமாக இருக்க போகிறது. தெரிந்தோ தெரியாமலோ கோபி கேரக்டர் மூலமாக உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்துமன்னித்துவிடுங்கள். இது வெறும் நடிப்பு தான்.
எனக்கு தெரியும். சில பேர் என்னை வருத்தப்படவேண்டாம் என சொல்கிறீர்கள். திட்டுறவங்க திட்டட்டும்.. அது மெடல் மாதிரி என்றும் சிலர் சொல்கின்றனர்.
இப்படி நடிக்கும்போது எனக்கே மனசு கஷ்டமாக இருக்கும். சீரியலை விட்டு போய்விடலாம் என்றும் தோன்றும். பாசிட்டிவ், சாஃப்ட் ஆன கேரக்டர் நடிக்கலாம் என்று நினைப்பேன், ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் இல்லையா. அதனால் தான் தொடர்ந்து நடிக்கிறேன்.
இவ்வாறு நடிகர் சதீஷ் தெரிவித்து இருக்கிறார்.
மன்னிச்சிடுங்க.. இது வெறும் நடிப்பு தான்! #Gopi #Baakiyalakshmi pic.twitter.com/YQxlqpRR8J
— Parthiban A (@ParthibanAPN) August 12, 2022
நடிகர் ஆர்யாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்