ராதிகா கையை பிடித்த கோபி.. வசமாக மாட்டினார்! பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து பெரிய ட்விஸ்ட்
விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறார். கோபி சிக்குவாரா இல்லையா என தொடர்ந்து பரபரப்பை கூட்டி இருக்கின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு சீரியல்களும் சேர்ந்து மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோபியின் அப்பா பிறந்தநாள் பார்ட்டிக்கு ராதிகா வருகிறார். அவர் உள்ளே வந்ததும் கோபி ஒரு அவசர மீட்டிங் இருக்கிறது என சொல்லி அறையில் சென்று ஒளிந்துகொள்கிறார். யார் வந்து அழைத்தாலும் வெளியில் வருவதில்லை.
அதன் பின் ராதிகா கிளம்பி சென்றுவிடுகிறார். அதை மாடியில் இருந்து பார்த்துவிட்டு தான் கீழே இறங்கி வருகிறார் கோபி. அந்த நேரத்தில் பால் பாக்கெட் வாங்க எழில் செல்ல, அவன் வேண்டாம் நான் போகிறேன் என சொல்லி வெளியில் வருகிறார் கோபி.
அதன் பின் ராதிகாவுக்கு போன் செய்து வர வைத்து சந்திக்கிறார். அவர் ராதிகாவின் கையை பிடித்து பேசிக்கொண்டிருப்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பார்த்து விடுகிறார். அவர் என்ன செய்ய போகிறார் என்பது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.