பாக்கியலட்சுமி சீரியல் இனியாவுக்கு புது ஜோடி.. காதலர் யார் பாருங்க
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா மகள் இனியா தொடர்ந்து ட்ரோல்களை சந்தித்து வரும் ஒரு கதாபாத்திரம்.
பல வருடங்களாக ஸ்கூலுக்கு சென்று கொண்டிருக்கிறார் என வந்த ட்ரோல்களை தொடங்கி, சமீபத்தில் அவர் டான்ஸ் ஆடியது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது வரை இனியா அதிகம் ட்ரோல் செய்யப்படும் ஒரு கதாபாத்திரம் தான்.
புது ஜோடி
ஏற்கனவே இனியாவுக்கு பல லவ் ட்ராக்குகள் சீரியலில் வந்துவிட்டது. ஸ்கூல் சீனியர் காதலர், பழனிச்சாமியின் அக்கா மகன் என லவ் ட்ராக் இதற்குமுன்பே பல முறை வந்திருக்கிறது.
தற்போது இனியாவுக்கு புது காதலர் சீரியலில் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டு இருக்கிறார்.
கனா காணும் காலங்கள் 3 புகழ் அஜித் தான் அந்த ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். போட்டோ இதோ.