வீட்டுக்கே வந்த புது வில்லன்.. அதிரடியாக பாக்யா செய்த விஷயம்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புது திருப்பமாக புது வில்லன் கதாபாத்திராத்தை கொண்டு வந்திருக்கின்றனர். அதுவும் பாக்யா செய்து வரும் ஹோட்டல் தொழிலுக்கே சிக்கல் வில்லனை தான் கொண்டு வந்திருக்கின்றனர்.
பாக்யாவின் ஹோட்டலை விலைக்கு கேட்டு சிலர் வருகிறார்கள். அப்போது பாக்யா அவர்களை கோபமாக பேசி அனுப்பிவிடுகிறார்.
எங்க பாஸ் சுதாகர் நினைத்தால் ஒரு இடத்தை வாங்காமல் விடமாட்டார் என பில்டப் கொடுக்கிறார்கள். யாராக இருந்தாலும் தர முடியாது என சொல்லி பாக்யா அனுப்பி விடுகிறார்.
வீட்டுக்கே வந்து மிரட்டும் வில்லன்
அதன் பிறகு சுதாகர் பாக்யாவின் வீட்டுக்கே சென்று மிரட்டுகிறார். எவ்வளவு பணம் வேண்டும் கேளுங்கள் நான் கொடுத்துவிடுகிறேன், உங்கள் ஹோட்டலை எனக்கு எழுதி கொடுத்துவிடுங்கள் என கேட்கிறார்.
ஆனால் பாக்யா அவரையும் கோபமாக திட்டி வெளியில் போக சொல்கிறார். பாக்யா தன்னை அசிங்கப்படுத்தியதை எண்ணி அவரை பழிவாங்க துடிக்கிறார் சுதாகர்.
பாக்யாவின் குடும்பத்தை பற்றி ஆள் வைத்து விசாரித்து வர சொல்கிறார். அவர் வந்து சொன்ன தகவல்களின் அடிப்படையில் கோபியை அணுக அவர் முடிவெடுக்கிறார். அவரது நண்பர் செந்தில் தனது கம்பெனியில் தான் பணியாற்றுகிறார் என்கிற தகவலும் சுதாகருக்கு தெரிய வருகிறது.
அவர் மூலமாக கோபியிடம் பேச வர சொல்கிறார் சுதாகர்.