அப்போ அது உண்மை இல்லையா? பாக்யலக்ஷ்மி சீரியல் ரகசியத்தை உடைத்த திவ்யா கணேஷ்
நடிகைகள் திரையில் அழகாக தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வார்கள். சீரியல் நடிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா.. தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்களை ஈர்த்து வருவது சின்னத்திரை ஹீரோயின்கள் தான்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்கிற ரோலில் நடித்து வரும் திவ்யா கணேஷுக்கு இன்ஸ்டாவில் பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் ரசிகர்கள் உடன் உரையாடிய அவர் பல்வேறு விஷயங்களை பற்றி தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கூறி இருக்கிறார் அவர். ஆனால் மாப்பிள்ளை யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலுக்காக மட்டும் அவர் முகத்தில் ஒரு மாற்றம் செய்திருக்கிறார். அது என்ன என்பது பற்றி அவரே தெரிவித்து உள்ளார். முகத்தில் இருக்கும் மச்சம் தான் அது.
சீரியலில் மட்டும் தான் அந்த மச்சத்தை வைத்துக்கொள்வதாக திவ்யா கணேஷ் கூறி உள்ளார்.+