பாக்கியலட்சுமி ராதிகாவா இது! மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார், இதோ பாருங்க
பாக்கியலட்சுமி ஜெனிஃபர்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிஃபர்.
வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் பிரபலமான நட்சத்திரமாக இருக்கும் ஜெனிஃபர், கர்ப்பமாக இருந்த காரணத்தினால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறினார். இதன்பின் எந்த சீரியலிலும் இவர் நடிக்கவில்லை.
மாஸ் என்ட்ரி
இந்த நிலையில், மீண்டும் சின்னத்திரையில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஜெனிஃபர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தான் நடிகை ஜெனிஃபர் என்ட்ரி கொடுத்துள்ளார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார் ஜெனிஃபர். இதற்காக ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.