கோபிக்கு எதிராக திரும்பிய அவரது தாய், செம டுவிஸ்ட்- பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த அதிரடி
பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு தொடங்கப்பட்ட ஒரு தொடர்.
தொடரில் பாக்கியா தனது குடும்பத்தினருக்கு பார்த்து பார்த்து எல்லா விஷயங்களையும் செய்கிறார், ஆனால் அவரை மதிக்காத சிலரும் அந்த குடும்பத்தில் உள்ளார்கள், முக்கியமாக அவரது கணவர்.
எப்போதும் கோபி தனது மனைவி பாக்கியாவை திட்டிக்கொண்டே தான் இருப்பார். இவரைப் போல குடும்பத்தில் கஷ்டப்படும் பெண்கள் இந்த சீரியலுக்கு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
தற்போது வந்துள்ள சீரியலின் புதிய புரொமோவில், கோபி வழக்கம் போல் நான் அப்பாவிற்கு இவ்வளவு செலவு செய்தேன், நீ சமைத்தா அதையெல்லாம் கொடுத்தாள் என திட்டுகிறார்.
இதையெல்லாம் கேட்ட அவரது தாய் தனது நகைகளை கொண்டுவந்து பாக்கியாவிடம் நீ படும் கஷ்டம் எனக்கு தெரியும் இதை வைத்துக்கொள் என கூறுகிறார்.
எப்போதும் தனது மகனுக்காக பேசும் அவர் முதன்முறையாக இப்படி செய்திருப்பது சீரியல் பார்ப்போருக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.