பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்தில் கையெழுத்து வாங்கும் கோபி- பாக்கியலட்சுமி அதிரடி புரொமோ
பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என்றபடி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பத்தையே நம்பி வாழும் அவர் தனக்கு என்று எதையும் யோசிக்காமல் அவர்களுக்காகவே எல்லாவற்றையும் செய்து வருகிறார்.
இப்போது கதையில் பாக்கியாவின் கணவர் கோபி தனது மனைவியை விவாகரத்து செய்ய அந்த பத்திரத்தை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டார்.
தற்போது அடுத்த வாரம் ஒளிபரப்பாக போகும் தொடரின் புரொமோ வெளிவந்துள்ளது. அதில் ராதிகா கோபியை விவாகரத்தில் கையெழுத்து வாங்கி வரச்சொல்ல அவரும் ஓகே கூறுகிறார்.
பின் பாக்கியாவிடம் இதில் கையெழுத்து போடு என கோபி கேட்க அவரும் போடுகிறார்.
இதனால் குற்ற உணர்ச்சியில் கோபி பாக்கியாவிடம், இது என்ன பேப்பர் என கேட்க மாட்டாயா என்று அவர் சொல்ல பாக்கியா நீங்கள் கொடுக்கிறீர்கள் உங்களிடம் என்ன கேட்க வேண்டும் என்கிறார்.
இதோ அந்த புரொமோ,