நடுத்தெருவில் பாக்யா.. இன்னொரு ஹோட்டலும் போச்சு! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா சொந்தமாக வைத்திருந்த ஒரு ஹோட்டலை மகள் பாக்யாவுக்கு வரதட்சணை என சொல்லி வில்லன் சுதாகர் ஏமாற்றி வனகிக்கொள்கிறார்.
அதன் பிறகும் பாக்யா vs சுதாகர் பிரச்சனை தொடர்கிறது. பாக்யா அவரிடம் சண்டைபோட மீண்டும் அவரை எதாவது செய்யவேண்டும் என சுதாகர் திட்டம் போடுகிறார்.
இன்னொரு ஹோட்டலும் போச்சு
பாக்யா தொடங்கிய முதல் ஹோட்டல் வாடகை கட்டிடத்தில் தான் இருக்கிறது. அந்த இடத்தையும் வில்லன் சுதாகர் வாங்கிவிடுகிறார். அதன் பின் பாக்யாவை ஒரே நாளில் காலி செய்ய வேண்டும் என அந்த இடத்தின் ஓனர் வந்து கறாராக கூறிவிட்டு போகிறார்.
அவர் சுதாகர் உடன் கைகோர்த்து இருப்பதை பார்த்து பாக்யா அதிர்ச்சி ஆகிறார். அதன் பின் அது பற்றி நேராக வீட்டுக்கு சென்று அதை சொல்கிறார்.
அந்த நேரத்தில் பாக்யாவுக்கு ஆதரவாக கோபி சென்று சம்மந்தி சுதாகர் உடன் பேசுகிறார். ப்ரொமோவில் நீங்களே பாருங்க.

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
