அதிர்ச்சியில் மயங்கிய அமிர்தா.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரொமோ
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் பெரிய சிக்கல் வந்திருக்கிறது. அமிர்தாவின் முதல் கணவர் உயிரோடு இருக்கும் விஷயத்தை பாக்யா இதுவரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.
ஒருபுறம் செழியன் - ஜெனி வாழ்க்கை விவாகரத்தில் வந்து நிற்கிறது. இன்னொரு பக்கம் எழில் வாழ்க்கையும் தற்போது சிக்கலில் இருக்கிறது என்பதால் அதை தீர்க்க முடியாமல் பாக்யா தவிக்கிறார்.
நேரில் வந்த கணேசன்.. மயங்கிய அமிர்தா
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரொமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அமிர்தா கோவிலில் இருக்கும்போது அவரது முதல் கணவர் கணேசன் அவர் முன் வந்து நிற்கிறார். அப்போது அவரை பார்த்து கடும் அதிர்ச்சி ஆகிறார் அமிர்தா.
அந்த விஷயத்தை எழிலிடம் கூறி மயங்கி விழுந்துவிடுகிறார் அவர். அந்த நேரத்தில் எழில் முன்பும் வருகிறார் அவர்.
இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.