எல்லோர் முன்பும் அசிங்கப்பட்ட ஈஸ்வரி.. பாக்யா செய்த விஷயம்! அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் இத்தனை நாள் எல்லா பிரச்சனைக்கு காரணமாக இருந்த கோபி - ராதிகா ஆகியோரது திருமணமும் முடிவுக்கு வந்துவிட்டது. கோபியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டார் ராதிகா.
அதன் பிறகு பாக்யாவை மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழ வைக்க ஈஸ்வரி முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவுக்கு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கேக் வெட்டி கொண்டாடும் நிலையில் ஈஸ்வரி ஒரு விஷயத்தை எல்லோர் முன்பும் கூறுகிறார்.
பாக்யா மற்றும் கோபி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என ஈஸ்வரி அறிவிக்கிறார். அது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இவர்கிறது.
அதன் பிறகு பேசும் பாக்யா "நீங்க என்ன தான் சொன்னாலும் சரி, உங்க பையனுடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. சில விஷயங்கள் முடிந்தது முடிந்தது தான்" என கூறுகிறார் அவர்.
ப்ரொமோ இதோ.

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri
