எடிட்டரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோவை பாருங்க
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அதன் கதை தான். ஏற்கனவே தாத்தா ஆகிவிட்ட கோபி இப்படி எல்லாம் செய்யலாமா என தொடர்ந்து ட்ரோல் செய்யும் வகையில் தான் கதை சென்று கொண்டிருக்கிறது.
கோபியை ராதிகா உடன் அனுப்பவே மாட்டேன் என ஈஸ்வரி தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அவரை அங்கேயே விட்டுவிட்டு போவதாக கூறி ராதிகா தனது மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
அதன் பிறகு ராதிகாவை சந்திக்க கோபி சென்றபோதும் அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இது இது நிரந்தரமான பிரிவு, என் வாழ்க்கையில் இனிமேல் நீங்கள் வேண்டாம் என்று ராதிகா சொல்லி விடுகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி தனது மனைவி ராதிகா மற்றும் மயூ ஆகியோர் தன்னை விட்டு சென்றதை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார்.
வழக்கம் போல ஈஸ்வரி "ராதிகா உன் வாழ்க்கையில் வரவே இல்லை என நினைத்துக் கொள்" என கோபியிடம் கூறுகிறார்.
இந்த ப்ரோமோவில் கோபியின் பிரேக்அப் பற்றி சோகமாக பாடலுடன் காட்டப்பட்டு இருக்கிறது. அதை தான் நெட்டிசன்கள் தற்போது கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்
இந்த வயதில் லவ் பிரேக்கப் ஸ்டோரியா என கமெண்டில் கேட்டு வருகின்றனர். நீங்களே பாருங்க
அந்த ப்ரோமோவின் எடிட்டரையும் சிலர் விமர்சித்து இருக்கின்றனர்.