இனியா பிரச்சனை.. மீண்டும் வீட்டுக்குள் கோபி! இந்த அசிங்கம் தேவையா.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் சமையல் போட்டி மற்றும் இனியா பிரச்சனை ஆகியவை தான் பரபரப்பாக சென்றது. இனியா கல்லூரி தோழிகள் உடன் பப் சென்ற நிலையில் அங்கு சென்ற தகராறு காரணமாக போலீசில் சிக்கிக்கொள்கிறார்.
அந்த நேரத்தில் ராதிகா வந்து அவரை காப்பாற்றுகிறார். அதன் பின் பாக்யாவை வரவைத்து ராதிகா அசிங்கப்படுத்துகிறார். பாக்யா இனியாவை வீட்டுக்கு கூட்டி சென்று திட்டுகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி பாக்யா வீட்டுக்கு சென்று சண்டை போடுகிறார். இனியா இப்படி மாறியதற்கு பாக்யா சரியாக பார்த்துக்கொள்ளாதது தான் காரணம் என சண்டை போடுகிறார்.
இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி இனியாவை உடன் வரும்படி அழைக்கிறார். அதை முதல் ஆளாக தடுப்பது பாட்டி தான். அவர் கோபியை திட்டி தீர்க்க, இனியாவும் வர முடியாது என கூறிவிடுகிறார். கோபி அசிங்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
ப்ரோமோ இதோ..