பாக்கியாவிடம் கெஞ்சிய கோபி.. ஆனால் அவர் இப்படி சொல்லிட்டாரே! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி அவரது அம்மா ஈஸ்வரியை தனது வீட்டுக்கு கூட்டி சென்று இருக்கிறார். அங்கு ராதிகாவின் அம்மாவுக்கும் ஈஸ்வரிக்கும் தினமும் சண்டை வந்துகொண்டிருக்கிறது.
அதை சமாளிக்க முடியாமல் அவர் திணறுகிறார். ஹோட்டல் தொழிலை பார்ப்பதா இல்லை இவர்கள் சண்டைக்கு பஞ்சாயத்து செய்வதா என விழிபிதுங்கி நிற்கிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது கோபி சாலையில் பாக்யாவை சந்தித்து பேசுகிறார். நீ அழைத்தால் அம்மா உங்க வீட்டுக்கு வந்துடுவார், நீ கூப்பிடு என கோபி கெஞ்சுகிறார்.
ஆனால் பாக்யா முடியாது என ஒரே வார்த்தையில் பதில் சொல்லி அவருக்கு நோஸ்கட் கொடுக்கிறார். இருப்பினும் மனசு கேட்காமல் அதன் பின் ஈஸ்வரியை கோவிலில் சந்தித்து பேசுகிறார் பாக்யா.
ஆனால் அதற்கு ஈஸ்வரி என்ன சொல்லி இருக்கிறார் என நீங்களே ப்ரோமோவில் பாருங்க.