கோபி செய்த காரியம்.. விழுந்து விழுந்து சிரித்த குடும்பம்! - பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரொமோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் டெரராக இருந்து வந்த கோபியை தற்போது வர வர காமெடியனாக மாற்றிவிட்டார்கள். பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கோபி தற்போது அவர் வீட்டிலேயே எல்லோருடனும் தங்கி இருக்கிறார்.
மொத்த குடும்பமும் பாக்யாவுக்கு ஆதரவாக இருக்க, அவர்களுடன் ராதிகா சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார் கோபி.
பதறிய கோபி
தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மொத்த குடும்பமும் பேசி சிரித்துக்கொண்டிருக்க கோபியும் சென்று அவர்களுடன் இணைய நினைத்து அமர்கிறார்.
அப்போது எழில் அவரை பார்த்து சைகை செய்து ராதிகா வந்துவிட்டார் என கூறுகிறார். அதற்கு ஷாக் ஆன கோபி பதறிப்போய் எழுகிறார். அதை பார்த்து மொத்த குடும்பமும் விழுந்து விழுந்து சிரிக்கிறது.
ப்ரொமோ இதோ..
வீல் சேரில் கோபி.. ஷாக் ஆன பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள்!