சுதாகர் செய்த சதி.. கோபி மூலம் தொடங்கிய புது பிரச்சனை! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

Parthiban.A
in தொலைக்காட்சிReport this article
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புது வில்லன் வந்திருப்பதால் கதை சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இனியா காதல் பிரச்சனை காரணமாக கோபி மற்றும் மாமியார் ஈஸ்வரி இருவரையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விட்டார் பாக்யா.
அதன்பிறகு தற்போது பாக்யா நடத்தி வரும் ஹோட்டலை விலைக்கு கேட்டு சுதாகர் என்ற புது வில்லன் கதைக்குள் வந்திருக்கிறார். ஹோட்டல் எல்லாம் தர முடியாது என சொல்லி அவரை அசிங்கப்படுத்தி பாக்யா வெளியில் அனுப்பி விடுகிறார்.
அதனால் பாக்யாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என அந்த வில்லன் நினைக்கிறார். பாக்யா குடும்பத்தை பற்றி விசாரித்த அவர் ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறார்.
இனியா திருமண பிரச்சனை
கோபியை சந்திக்கும் வில்லன் சுதாகர் "உங்கள் மகள் இனியாவை எங்கள் வீட்டு மருமகளாக்க நினைக்கிறேன்" என சொல்கிறார். அதைக் கேட்டு கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் திருமணத்தை நடத்த முயற்சிக்கின்றனர்.
ஆனால் அதற்கு பாக்யா எதிர்ப்பு தெரிவிக்கிறார். வழக்கம்போல ஈஸ்வரி இனியா திருமணத்தை நடத்தியே தீருவேன் என சண்டை போடுகிறார்.
இது தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. நீங்களே பாருங்கள்.