ஜெனி கேட்ட கேள்வி.. அவமானத்தில் தலைகுனிந்த பாக்யா! அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மூத்த மகன் செழியன் யாருக்கும் தெரியாமல் ஜெனிக்கு துரோகம் செய்து வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது எல்லோரும் தெரியவந்துவிட்டது. அதனால் ஜெனி சண்டை போட்டுவிட்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
செழியனை திட்டுவதை விட்டுவிட்டு வீட்டில் எல்லோரும் பாக்யாவை தான் திட்டினார்கள். தற்போது ஜெனியை எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் மொத்த குடும்பமும் தவிப்பில் இருக்கிறது.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா மற்றும் அவரது மாமியார் இருவரும் ஜெனி வீட்டுக்கு சென்று பேசுகிறார்கள்.
'என் பொண்ணு மொத்த வாழ்க்கையையும் கெடுத்துடீங்க, தயவு செஞ்சு கிளம்புங்க' என ஜெனியின் அம்மா அவர்களை அசிங்கப்படுத்துகிறார்.
'நடந்தது ஒன்னும் சொல்ற அளவுக்கு பெரிய விஷயம் இல்ல..' என பாக்யா சொல்ல, ஜெனி அதற்கு கொடுக்கும் பதிலடியால் பாக்யா அவமானத்தில் தலைகுனிகிறார்.
"நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கப்போறது இல்லை, எப்படி நீங்க என்னை கூப்பிட வந்திருக்கீங்க. என் நிலைமையில் நீங்களும் இருந்திருக்கீங்க. நீங்க விலகி தானே இருந்தீங்க. உங்களுக்கு நடந்தா அது பிரச்சனை. எனக்கு நடந்தா அது ஒன்னுமே இல்லையா" என ஜெனி கேட்கிறார்.
இதை கேட்டு பாக்யா அவமானத்தில் தலைகுனிகிறார். ப்ரோமோ வீடியோ இதோ..