ஒருவழியாக ராதிகா எடுத்த முடிவு.. இனியாவே ஷாக்! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யாவின் வீட்டில் தான் கோபி மற்றும் ராதிகா ஆகியோர் இருக்கின்றனர்.
இனியா பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பாக்யா, ராதிகா என இருவரும் ஒரே நேரத்தில் மேடைக்கு வந்தபோது அவருக்கு ரெண்டு அம்மா என சொல்லி எல்லோரும் கிண்டல் செய்தனர். அதன் பிறகு இனியா தான் பட்ட அசிங்கத்திற்கு ராதிகாவை குறை கூறினார். அவரை சமதப்படுத்தவும் ராதிகா முயற்சிகள் செய்தார். பாக்யாவும் ராதிகாவுக்கு சப்போர்ட் செய்தது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
ராதிகா எடுத்த முடிவு
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா தான் வீட்டை விட்டு போவதாக முடிவை அறிவிக்கிறார்.
கோபியும் அவருடன் போவதாக கூறும் நிலையில், இனியா உள்ளிட்டோர் அவரை தடுக்கின்றனர். ராதிகாவும் தான் கோபியை இங்கேயே விட்டு செல்வதாக கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறார். இனியா அவரை கட்டிப்பிடித்து நன்றி கூறுகிறார்.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க.