பாக்யா எடுத்த அதிரடி முடிவு, அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்! அடுத்த வார ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வார ப்ரோமோவில் பாக்யா எடுத்த முடிவை பார்த்து மொத்த குடும்பமும் கடும் அதிர்ச்சியில் இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா உறவு பற்றி பாக்யா மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவந்துவிட்ட நிலையில், பாக்யா வீட்டை விட்டு வெளியேறி தன் மசாலா கம்பெனி நடக்கும் வீட்டில் இருக்கிறார்.
அதற்கு பிறகு அவரை சமரசம் செய்து வீட்டுக்கு அழைத்து வர குடும்பத்தினர் எல்லோரும் முயற்சிக்கின்றனர். கோபியும் எப்படியாவது பொய் பேசி அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.
அடுத்த வார ப்ரொமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா வீட்டில் இருந்து பட்டுப்புடவை மற்றும் நகைகள் எல்லாம் அணிந்துகொண்டு இறங்கி வந்து நிற்கிறார். அதை பார்த்து அவர் கோவிலுக்கு சொல்கிறாரா என பாட்டி கேட்கிறார்.
இன்று கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என நோட்டீஸ் வந்ததே அதற்காக தான் இப்படி என அவர் கூற அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
ப்ரோமோ வீடியோ இதோ