வெளியே போங்க கோபி.. பாக்யா சொன்ன பின் நடந்த அதிர்ச்சி! - பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்து இருந்தனர். கோபியை ராதிகா உடன் அனுப்பாமல் ஈஸ்வரி அவரை தன்னுடன் அழைத்து வருகிறார்.
பாக்யா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஈஸ்வரி அதை கேட்பதாக இல்லை. அதனால் பாக்யா நேரடியாக கோபியை சந்தித்து இன்னும் ஒரே வாரத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறிவிடுகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா கோபியை வெளியில் போகும்படி எல்லோர் முன்பும் கூறுகிறார்.
அதற்கு கோபிக்கு நெஞ்சுவலியே மீண்டும் வந்துவிடுகிறது. அதனால் ஈஸ்வரி மீண்டும் பாக்யாவிடம் வந்து கண்ணீர் விடுகிறார். 'எனக்கு இருப்பது ஒரே மகன், அவன் உயிர் உடன் இருக்க வேண்டும்' என கெஞ்சுகிறார்.
பாக்யா என்ன முடிவு எடுக்க போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.