பாக்யா கேட்ட ஒரே ஒரு கேள்வி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி! அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் ராதிகா கீழே விழுந்து அவரது கர்ப்பம் கலைந்ததும் கதையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்க அம்மா ஈஸ்வரி தான் என்னை தள்ளிவிட்டார் என ராதிகா கோபியிடம் பொய்யாக கூறுகிறார். அதை நம்பும் கோபி தனது அம்மா ஈஸ்வரியை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு அனுப்புகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் அடுத்த வார promo தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஈஸ்வரி பாக்யா வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் நடந்ததை சொல்லி கண்ணீர் விடுகிறார்.
இதுபற்றி கோபியிடம் பாக்யா பேசுகிறார். "உங்க அம்மாவை பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகம் தெரியும். அவர் குழந்தையை கொன்று விட்டார் என சொன்னால் நானே நம்பமாட்டேன். நீங்க பேசியது நியாயமா என யோசிச்சு பாருங்க என பாக்யா கூறிவிட்டு போகிறார்.
Promo இதோ..