ராதிகா பேச்சால் அதிர்ந்துபோன கோபி! பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த வார ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது.
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து விட்டார். விவாகரத்துக்கு பிறகு பாக்யா எடுத்த முடிவு தான் கோபி வீட்டை விட்டு அனுப்பப்பட காரணம்.
அவனை வெளியில் அனுப்பினால் நேராக ராதிகா வீட்டுக்கு தான் போவான் என பாட்டி மட்டுமே யோசிப்பார். அதற்காக அவர் ராதிகா வீட்டுக்கு சென்று சண்டைபோடவும் செய்வார்.
அடுத்த வார ப்ரொமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரொமோ வெளிவந்திருக்கிறது. அதில் கோபி ரோட்டில் ராதிகா கையை பிடித்து இழுத்து நிறுத்தி பேசுகிறார். உன்னை திருமணம் செய்துகொள்வதற்காக தான் நான் குடும்பத்தை விட்டு வந்தேன் என கோபி கூற, எனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என கூறுகிறார்.
நான் செத்து போவதை தவிர வேறு வழி இல்லை என கோபி மிக ஆவேசமாக கூற, "நம்பிக்கையோடு இருங்க, நல்லதே நடக்கும்" என ராதிகா கூறிவிட்டு போகிறார்.
மார்டன் உடையில் அசத்தலான போஸ் கொடுத்த ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. போட்டோஷூட் புகைப்படங்கள்