இந்த வயசில் காலேஜுக்கு போகிறாரா பாக்யா? குடும்பத்தினரே உச்சகட்ட ஷாக்.. லேட்டஸ்ட் ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா ஒருவழியாக பணம் கொடுத்து கோபியிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கிவிட்டார். அதன் பிறகு இனியா பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று இருப்பதற்கு பாராட்டு விழாவும் நடந்து முடிந்துவிட்டது.
அதன் பின் இனியா என்ன காலேஜில் சேர வேண்டும் என சண்டை நடந்து, முடிவில் இனியா விஸ்காம் படிப்பில் சேர்ந்திருக்கிறார். அதற்கு 1.5 லட்சம் பீஸ் கட்ட கோபியிடம் பணம் இல்லை. ஆனால் அவருக்கு முன்பே பாக்யா அந்த பணத்தை கட்டி கோபிக்கு நோஸ்கட் கொடுக்கிறார்.
இந்நிலையில் தற்போது வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பிக்கிறார். ஆனால் வங்கி அதிகாரி பாக்யா டிகிரி முடிக்கவில்லை அதனால் லோன் தர முடியாது என கூறிவிடுகிறார்.
பாக்யா முடிவு
அதனால் பாக்யா கல்லூரியில் சேர முடிவெடுக்கிறார். அதை பற்றி அவர் இனியாவிடம் கூற அவர் மேலும் உச்சகட்ட அதிர்ச்சி ஆகிறார்.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க..