இதுவும் போச்சு.. பாக்யாவுக்கு வந்த பெரிய ஷாக்! பாக்கியலட்சுமி நாளைய ப்ரொமோ
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா பல்வேறு தடங்கல்களை தாண்டி தற்போது தான் பொருட்காட்சியில் கேன்டீன் தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்க விழாவில் அதிகம் பேர் வர நல்ல வசூலும் வருகிறது.
இன்றைய எபிசோடில் ராதிகா பழனிசாமியிடம் ஒரு விஷயத்தை கேட்கிறார். பாக்யாவை உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்கிறார். அதற்கு பழனிச்சாமி மழுப்பலாக பதில் சொல்கிறார்.
கேன்டீனுக்கு சீல்
பாக்யா கேன்டீன் தராத கோபத்தில் வில்லன் தற்போது வந்து சதி வேலைகளை தொடங்கிவிட்டார். இன்றைய எபிசோடின் இறுதியில் நாளைய ப்ரோமோவும் வந்திருக்கிறது.
அதில் பாக்யாவின் கேன்டீனை இழுத்து மூடி சீல் வைத்துவிடுகின்றனர் அதிகாரிகள். அதனால் என்ன செய்வது என தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார் பாக்யா.