கைது ஆன ஈஸ்வரி, கோபிக்கு பளார்.. பாக்கியலட்சுமி அதிர்ச்சி ப்ரொமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் பல்வேறு திருப்பங்கள் வந்துகொண்டிருக்கிறது. ஈஸ்வரி தள்ளிவிட்டு தான் ராதிகாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது என புகார் சொல்லி ஏற்கனவே கோபி தன் அம்மா ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார்.
அதுவே எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் கோபியை எல்லோரும் திட்டி தீர்த்து வந்தனர். தற்போது அதை விட உச்சமாக ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
ஈஸ்வரி கைது.. கோபிக்கு பளார்
ராதிகாவின் அம்மா வில்லத்தனத்தின் உச்சத்திற்கே சென்று நேராக போலீஸ் நிலையம் சென்று கோபியின் அம்மா மீது புகார் கொடுத்துவிடுகிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோவில் போலீசார் வந்து ஈஸ்வரியை கைது செய்து ஜீப்பில் கூட்டி செல்கிறது.
அப்போது அங்கு வரும் கோபியை தாத்தா கோபத்தில் பளார் என அறைந்துவிடுகிறார். ப்ரொமோ இதோ.