சிக்கிக்கொண்ட அமிர்தா, குழந்தை.. பாக்கியலட்சுமி அதிர்ச்சி ப்ரொமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 உடன் மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் கதை அமிர்தா ட்ராக்கிற்கு வந்திருக்கிறது.
அமிர்தாவின் முதல் கணவர் கணேஷ் மூலமாக வந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்து இருகிறது. கணேஷின் அப்பா இறக்கும் நிலையில் மோசமான உடல்நிலையில் இருக்கிறார் எனவும் அமிர்தாவை அனுப்பி வையுங்க என்று பாக்யாவிடம் போன் செய்து அம்மாவை மிரட சொல்ல வைக்கிறார் கணேஷ்.
ப்ரொமோ
அதை நம்பி பாக்யா மற்றும் அமிர்தா இருவரும் அவர்கள் வீட்டுக்கு செல்ல அங்கு கணேஷ் மறைந்து இருந்து வந்து அவர்களை பிடித்துக்கொள்கிறார்.
அவனை தள்ளிவிட்டு பாக்யா அந்த வீட்டில் இருந்து வெளியேற நினைந்த நொடியில் அவன் கத்தியை அமிர்தா கழுத்தில் வைத்து மிரட்டுகிறான்.
அதன் பின் அமிர்தாவையும் குழந்தையையும் வண்டியில் கணேஷ் கடத்தி கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பாக்யா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.
ப்ரோமோ இதோ