மறுபடியும் மொதல்ல இருந்தா.. Loopல் பாக்கியலட்சுமி கதை! ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 1300 எபிசோடுகளை கடந்துவிட்டது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட கோபி அதற்குப்பிறகு பாக்யாவுக்கு அளித்துவரும் பிரச்சனைகளை பற்றித்தான் கதை சென்றுகொண்டிருக்கிறது.
கோபி ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் இருந்த நிலையில் அவரை பாக்யாவின் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார் அவரது அம்மா ஈஸ்வரி. அதனால் இனி என்ன செய்வது என தெரியமால் ராதிகா வீட்டை காலி செய்துவிட்டு செல்கிறார்.
அதை பற்றி கோபி வீட்டில் எல்லோரிடமும் சொல்ல, பாக்யா கோபியை திட்டுகிறார். 'உங்க மகள் இனியாவை இப்படி திருமணம் செய்து யாவரது விட்டுவிட்டு போனால் ஏற்றுக்கொள்வீர்களா' என பாக்யா கேட்கிறார். அதனால் கோபி திருந்தி ராதிகாவை பார்க்க செல்கிறார்.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
கோபி ராதிகாவை சந்தித்து அவரை மீண்டும் பாக்யா இருக்கும் வீட்டிற்கே அழைத்து வந்துவிடுகிறார். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
'மறுபடியும் மொதல்ல இருந்தா..', 'கதை loopல் செல்கிறது' என நெட்டிசன்கள் ப்ரோமோவை விளாசி வருகின்றனர். நடந்த கதையே மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது என நெட்டிசன்கள் கோபமாக பதிவிட்டு இருக்கும் கமெண்டுகளை பாருங்க.