கோபத்தில் கத்தி எடுத்த கோபி, ஷாக் ஆன ராதிகா! பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பு
பாக்கியலட்சுமி வீட்டுக்கு எதிரிலேயே கோபி தன் புது மனைவி ராதிகா உடன் குடியேறி இருக்கிறார். வீடு அருகில் இருப்பதால் பாக்யா மற்றும் குடும்பத்தினரை டென்ஷன் ஆக்கலாம் என அவர் இப்படி செய்தார்.
ஆனால் அதுவே தற்போது கோபிக்கு சிக்கலாக மாறிவிட்டது. கோபி ராதிகாவிடம் சிக்கி படும் கஷ்டத்தை பார்த்து கோபியின் அப்பா தொடர்ந்து கலாய்த்து வருகிறார்.
மேலும் செழியன் - ஜெனிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பது பற்றி கூறி கோபியின் அப்பா மேலும் தெருவில் கலாய்த்து இருக்கிறார். இன்றைய எபிசோடில் அவர் கோபியின் வீட்டுக்கே சென்று ஸ்வீட் டப்பாவை கொடுத்துவிட்டு "கோபி தாத்தா.. புதுசா கல்யாணம் ஆனாலும் இனி நீ தாத்தா தான்" என கலைத்துவிட்டு போகிறார்.
கையில் கத்தி எடுத்த கோபி
அதன் பின் இன்றைய எபிசோடு முடிவில் நாளைய எபிசோடுக்காண ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி - ராதிகா காரில் வந்து இறங்கும்போது தாத்தா ரோட்டில் கத்தி கத்தி கலாய்க்கிறார்.
கோபி தாத்தா.. கோபி தாத்தா.. என அவர் சொல்ல கோபிக்கு கோபம்அதிகரிக்கிறார் . அவர் நேராக வீட்டுக்கு சென்று கையில் கத்தியை எடுத்துக்கொண்டு கொலை செய்ய போவதாக கூற, ராதிகா கடும் அதிர்ச்சி ஆகி அவரை தடுக்கிறார். இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் கடைசியாக பார்த்த திரைப்படம் எது தெரியுமா?