நடுத்தெருவில் நிற்கும் கோபி.. அடுத்து செய்த விஷயம்! பாக்கியலட்சுமி ப்ரொமோ
தன் வீட்டில் இருந்து வெளியேறிய கோபி தற்போது நேராக ராதிகா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள் வந்துகொண்டிருக்கிறது. கோபி வீட்டில் வசமாக சிக்கிக்கொண்டது, பாக்யா சட்டப்படி விவாகரத்து பெற்றது, அதனை தொடர்ந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பாக்யாவை தடுத்து நிறுத்தி சண்டை போட்டது என கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது சீரியல்.
பாக்யா பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்வார் என பார்த்தால், திடீரென கோபியின் பெட்டியை தூக்கி கொடுத்து அவரை வெளியில் போக சொன்னது தான்உச்சகட்ட ட்விஸ்ட்.
முடியல தலைவரே முடியல..! ?
— Vijay Television (@vijaytelevision) August 18, 2022
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VIjayTelevision pic.twitter.com/4qTqcHpS8X
ராதிகா வீட்டில் கோபி
இந்நிலையில் கோபி தனது வீட்டில் இருந்து வெளியேறி நேராக ராதிகா வீட்டுக்கு தான் சென்றிருக்கிறார். கோபியை திருமணம் செய்துகொள்வதா வேண்டாமா என யோசனையில் இருக்கும் ராதிகா தற்போது நடுத்தெருவில் நிற்கும் கோபியை தன் வீட்டில் தங்க ஏற்றுக்கொள்வாரா இல்லையா என்பது தான் கேள்வி.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இது காட்டப்பட்டு இருக்கிறது.
இதோ..
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?